Thursday, 29 January 2026

 


Human Chain Protest in Chennai was conducted very successfully in Rajarathinam Stadium. Many of our comrades from different parts of Tamilnadu participated and raised slogans againt GTES society.

Tuesday, 27 January 2026

ஜனவரி....29
சென்னையில் சங்கமிப்போம்...
💪💪💪💪💪💪💪

ஆண்டுகள் பல...
ஆகிவிட்டன...

மறைந்தவர் சிலர்...
மறந்தவர் பலர்...

கூட்டுறவு...
கூடாத உறவுகளால்...
கொள்ளையர்களின் கூடாரமாகியது...

உழைத்தவன் காசை
ஊரான் அடித்தான்...

காவலர்கள் வேடமிட்டு...
வேலிகள் விரும்பியபடி...
மேய்ந்தன...

காவலர்கள்...
கள்வர்கள் ஆனார்கள்..
கள்வர்கள்...
தலைவர்கள் ஆனார்கள்..

உழைத்த பணத்தில்...
ஒரு பைசா கூட வாங்காமல்...
உழைத்தவன்...
ஓய்வு பெற்றான்...

நலம் காக்கும். .
நலச்சங்கத்தில்..
நம் சங்கத்தில்..
உரிமைக்காக...
குரல் கொடுத்தான்..

வலித்தவர் குரல் கேட்டு
PWA நலச்சங்கம்...
வரித்தது கோரிக்கையை..
விடுத்தது அறைகூவல்..

பொறுத்தது போதும்...
தலைநகர் நோக்கி..
புறப்படு தோழனே...

இழந்ததை மீட்க...
உழைத்ததை காக்க...
உணர்வுடன் திரள்வோம்..